கனடா நகரமொன்றில் கொட்டித் தீர்த்த கல் மழை: அத்தனை கார் கண்ணாடிகளும் நாசம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பல பகுதிகள் சூறாவளி, புயல், மழை என பல்வேறு வானிலைகளை அனுபவித்த நிலையில், கால்கரி பகுதியை கல் மழை அல்லது ஆலங்கட்டி மழை தாக்கியுள்ளது.

டென்னிஸ் பந்து அளவிலான பனிக்கட்டி உருண்டைகள் வானிலிருந்து வீழ்ந்ததில் கார்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

ஐந்தாவது வார்டின் கவுன்சிலரான George Chahal கூறும்போது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் சேதமடையாத கார் ஒன்றுகூட இல்லை எனலாம் என்கிறார்.

பல நூறு மில்லியன் டொலர்கள் சேதமடைந்திருக்கும் என எண்ணுகிறேன் என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பாக மக்கள் ஏராளம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருந்தார்கள்.

அவற்றில் ஒன்றில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் நொறுங்கியிருப்பதையும், தரையில் வளர்ந்திருந்த புல்லையும் தாண்டி நிலம் சேதமடைந்திருந்ததையும் காணமுடிகிறது.

© Provided by The Weather Network

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்