உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா? பாரிய சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதாவின் திருமணம்

Report Print Fathima Fathima in சினிமா
ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தான நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக நேற்று பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வீட்டிலேயே பிரம்மாண்டமான முறையில் செட் போடப்பட்டு, குடும்ப நண்பர்கள்- உறவுகள் கலந்துகொள்ள திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.

வனிதாவை அவரது மூத்த மகள் அழைத்து வர, தம்பதிகள் வைர மோதிரத்தை மாற்றிக்கொண்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

அதன்பின்னர் கேக் வெட்டி இருவரும் நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்தனர், இரவில் பார்ட்டியும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவே தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது, கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் நடைபெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக அனைவரும் முக கவசமும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது எதுவுமே வனிதாவின் திருமணத்தில் கடைபிடிக்கப்படவில்லையாம், இவரது திருமண படங்கள், வீடியோக்கள் வைரலாக உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்