போதைப்பொருள் விவகாரம்? பிரபல தமிழ் நடிகை கைது

Report Print Kavitha in சினிமா
972Shares

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களிடன் நடத்திய விசாரணை அடிப்படையில் நடிகை ராகினி திவேதிக்கும் இந்த போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இவருக்கு மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணைக்கு நேற்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி ராகினி ஆஜராகவில்லை.

இதற்கிடையே நடிகை ராகிணி திவேதி சார்பில், அவரது வழக்கறிஞர் பொலிசாரை சந்தித்து பேசி விசாரணைக்கு அவர் ஆஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்து, வருகின்ற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இவரது வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸ், ராகினியை கைது செய்து மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்