‘வெல்வோம்’ - தமிழைப் போற்றும் பாட்டுக்கு இயக்குனர் சமுத்திரக்கனி வாழ்த்து

Report Print Santhan in சினிமா

யூட்யூப் வலைத்தளத்தில் அண்மையில் வெளியான தமிழ்த்தாய் அந்தாதிப் பாடலுக்கு இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாவலர் தவ சஜிதரன் எழுதி சதீஷ் ராம்தாஸ் இசையமைத்துப் பாடிய தமிழ்த்தாய் அந்தாதிப் பாடலில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் குறுந்திரை உலகுக்கு அறிமுகப்படுத்தி ‘சஹானா’ நாயகி காவ்யா தோன்றியிருந்தார்.

இந்தப் பாடலை உலகப் புகழ் பெற்ற அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீட் அண்மையில் வெளியிட்டு வைத்திருந்தார்.

இந்தப் பாடலின் இசையும் தமிழ் அழகும் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் அந்தாதியின் முழுப்பாடல்களும் crowd funding மூலம் வீடியோ பாடல்களாக உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிழ் மீது பற்றுக்கொண்டவர்கள் பங்களிக்கலாம் என்றும் ‘மொழியகம்’ தெரிவித்துள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்