வடக்கு கிழக்கில் ஐ.பி.சி நிறுவனத்தின் இரண்டாவது கைத்தொழில்பேட்டை

Report Print Dias Dias in சமூகம்
277Shares
277Shares
lankasrimarket.com

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடனும், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் மட்டக்களப்பில் ஐ.பி.சி நிறுவனத்தின் இரண்டாவது கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த கைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை, கும்புறுமூலை பகுதியில் குறித்த கைத்தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் அல்லாமல் முழு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு குறித்த கைத்தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளதாக ஐபிசி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்