அடுத்தடுத்து மூடப்படும் மெக்டொனால்ட்ஸ் கடைகள்: காரணம் என்ன

Report Print Kabilan in நிறுவனம்
173Shares
173Shares
ibctamil.com

வட இந்தியாவில் இருக்கும் ‘மெக் டொனால்ட்ஸ்’ கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன.

மேலும், இம்மாதத்திலும் இன்னும் பல கடைகள் மூடப்படும் எனவும் கூறப்படுகிறது.

உலகின் முன்னணி உணவகம் ‘மெக் டொனால்ட்ஸ்’, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. எல்லா இடங்களிலும் இதன் கிளைகள் இருந்தாலும், அவையாவும் நேரடியாக இயங்காது.

இதற்காக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வியாபாரிகள் இருக்கின்றனர். அந்நபர்கள் மூலம், கடையை விருப்பம் உள்ளவர்கள் எடுத்து நடத்துவர்.

உணவுப் பொருட்கள் மட்டும் ‘மெக் டொனால்ட்ஸ்’ நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும். இந்நிலையில், கடந்த வாரம் ஒரே நாளில், 84 ‘மெக் டொனால்ட்ஸ்’ உணவகங்கள் மூடப்பட்டன.

உலகம் முழுவதும் இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், வட இந்தியாவில் இருக்கும் சில ‘மெக் டொனால்ட்ஸ்’ உணவகங்களில் சாப்பிட வேண்டாம் என, ‘மெக் டொனால்ட்ஸ்’ நிறுவனமே அறிவித்திருந்தது.

எனவே இம்மாதம், மேலும் பல ‘மெக் டொனால்ட்ஸ்’ நிறுவனங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெக் டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் வியாபாரிகளில் முக்கியமானவராக இருக்கும் விக்ரம் பாக்ஷூ என்பவருக்கும், ’ராதா கிருஷ்ணன் புட் லேண்ட்’ என்ற நிறுவனத்திற்கும் இடையில், உணவின் தரம் குறித்து பிரச்சனை இருந்துள்ளது.

இதுவே, இந்தியாவில் பல ‘மெக் டொனால்ட்ஸ்’ உணவகங்கள் மூடப்படுவதற்கு காரணாமாக கூறப்படுகிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்