பயனர்களின் தகவல்களை ரகசியமாக விற்பனை செய்யும் பிரபல ஆன்டிவைரஸ் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பிரபல ஆன்டி வைரஸ் மென்பொருளான Avast இனை உலகில் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் இம் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது பயனர்களின் இணைய உலாவல்கள் தொடர்பான தகவல்களை குறித்த நிறுவனம் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Motherboard and PCMag இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் Jumpshot எனும் துணை நிறுவனத்தின் ஊடாகவே இத் தரவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கூகுள் தேடல்கள், கூகுள் மேப், LinkedIn பக்கங்கள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஆபாசத் தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் தொடர்பான தகவல்களே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்