ஊபர் போன்று ஒன்லைன் வாடகை வாகன சேவையை Ola நிறுவனமும் உலகின் பல நகரங்களில் வழங்கிவருகின்றது.
எனினும் இச் சேவையை லண்டனில் தொடர்வதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நிறுவனம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஊபர் நிறுவனத்தின் அனுமதிப் பத்திரமும் இங்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.
எனினும் தனது நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சியில் ஊபர் ஈடுபட்டுவருகின்றது.
இது வெற்றியளிக்கும் பட்சத்தில் Ola நிறுவனமும் மீண்டும் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.