மனம் திறந்த ஜெயவர்த்தனே

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
மனம் திறந்த ஜெயவர்த்தனே

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னால் கிரிக்கெட் அணித்தலைவருமான ஜெயவர்த்தனே தனது வாழ்வின் சந்தித்த மற்றும் கற்றுக்கொண்ட சில முக்கிய விடயங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இலங்கை அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்தது சிறப்பான தருணம், அணித்தலைவர் பதவி என்பது நாம் படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று,

ஆம், அதுபோன்றே எனக்கு முன்னால் இருந்த அணித்தலைவர்களான சமிந்தா வாஸ, முத்தையா முரளிதரன், சங்கக்காரா, அஜந்தா மெந்திஸ் ஆகிய தலைவர்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்,

ஆனால், அணித்தலைவராக இருப்பவருக்கு முக்கியமான ஒன்று, உங்களை சுற்றியிருப்பவர்களின் குணநலன்களை அறிந்துகொள்ள வேண்டும்,

எனது பள்ளிப்பருவத்தின் 13 வயதில் கிரிக்கெட் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான், எனது பயிற்சியாளர் Mr Lionel Mendis இருந்து அதிக விடயங்களை கற்றுக்கொண்டேன்,

எவ்வாறு நடப்பது, எவ்வாறு ஆடை ஆணிவது, பேட்டை எவ்வாறு பிடிப்பது என எனது எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான விடயங்களை கற்றுக்கொண்டேன்,

அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த பின்னர், முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜீன ரணதுங்காவின், உறுதியான நற்பண்புகள் மிகவும் பிடிக்கும்.

உறுதியான நற்பண்புகளை கொண்ட அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments