ரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ணப் கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா - டெல்லி அணிகள் விளையாடின.

நேற்று நடந்த போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ஸ்வப்னில் கூகலே - அன்கிட் பவனே ஜோடி ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 594 ஓட்டங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

ஸ்வப்னில் 351 ஓட்டங்களும், அன்கிட் 258 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்கள்.

இதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் போபால் அணிக்காக விஜய் ஹசாரே - குல் முகமது ஜோடி 577 ஓட்டங்கள் இணைந்து எடுத்ததே சாதனையாக இருந்தது, அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments