டோனியாக இருந்த சங்ககாரா கோஹ்லியாக மாறியது ஏன்? முகம் வாடிய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

எப்போதும் ஜாலியாக காணப்படும் சங்ககாரா பாகிஸ்தானில் நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டியின் பிளே ஆப் சுற்றில் வீரர்களிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்டார்.

பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன்னர் சங்ககாரா தலைமையிலான கராச்சிகிங்ஸ் அணி, பேஸ்வர்ஸ் அணியுடன் மோதியது. இதில் கராச்சி கிங்ஸ் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அன்றைய போட்டியின் போது எப்போது கூலாக காணப்படும் அதாவது இந்திய வீரர் டோனி போன்று இருக்கும் சங்ககாரா அன்று திடீரென்று ஆக்ரேச வீரரான கோஹ்லி போன்று செயல்பட்டார்.

அன்றைய போட்டியில் பேஸ்வர் அணி 10 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில் உணவு இடைவெளியின் போது கராச்சி கிங்ஸ் அணியின் தலைவர் சங்ககாரா அணி வீரர்கள் அனைவருக்கும் சற்று ஆக்ரோசமாக ஆலோசனைகளை வழங்கினார்.

இதனால் அந்த இடத்தில் இருந்த வீரர்களின் முகங்கள் சற்று வாடியது போல் காணப்பட்டது. மேலும் இது குறித்து ஆட்டம் முடிந்த பிறகு சங்ககாரா கூறுகையில், நாம் முக்கியமான ஒரு போட்டியில் விளையாடும் போது ஆரம்பத்தில் ஓரிரண்டு விக்கட்டுகளை கைப்பற்றுவது அவசியம்.

ஆனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. ஓட்டங்களும் உயர்ந்தன. இதன் காரணமாகத்தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டி இருந்தது என்றும், இவை அனைத்தும் போட்டிக்காக மட்டுமே என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments