பந்துவீச்சில் பிரித்து மேய்ந்த இந்தியா: திருப்பியடித்த தென் ஆப்பிரிக்கா

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
418Shares
418Shares
ibctamil.com

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்கள் குவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கியது. இதில், நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் பேப் டுபிளஸ்சி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து துடுப்பாட்டம் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பேப் டுபிளிசிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டுபிளிசிஸ் 62 ஓட்டங்களிலும், டிவில்லியர்ஸ் 65 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.

அவர்களுக்குப் பின் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் தென்னாப்பிரிக்கா அணி 286 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்அவுட்டானது.

இந்திய அணியின் சார்பாக புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும், பும்ரா, சமி மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் முரளி விஜய் 1 ரன்னிலும், தவான் 16 ஓட்டங்களிலும், கோஹ்லி 5 ஓட்டங்களிலும் அவுட்டாகி சொதப்பினர்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணியை விட 258 ஓட்டங்கள் பின்தங்கி தடுமாறி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்