இலங்கை கிரிக்கெட் அணி மீதான விசாரணை தொடர்கிறது: ஐசிசி வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
387Shares
387Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் அணி மீதான மேட்ச் பிக்சிங், லஞ்சம் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை என ஐசிசி விளக்கமளித்துள்ளது.

இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையில் கடந்தாண்டு யூன் - யூலையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது.

இதையடுத்து இலங்கை முன்னாள் வீரர் புரோமோத்யா விக்ரமசிங்கே அந்த தொடரில் மேட்ச் பிக்சிங் போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாக ஆராயும்படி இலங்கை வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்கள்.

இதையடுத்து கடந்த செப்டம்பரில் இது தொடபான விசாரணையை ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு தொடங்கியது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தலைவர் ஆஸ்லே டி சில்வா அளித்த பேட்டியில், ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணை முடிந்துவிட்டது.

எங்கள் மீது தவறு இருப்பதற்கான ஆதரங்கள் எதையும் அவர்கள் இதுவரை சமர்பிக்கவில்லை என கூறினார்.

ஆனால் இதை மறுத்துள்ள ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசாரணை நடக்கும் போது அது குறித்த தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்