அஷ்வின் அணியின் கெத்தான ஹாட்ரிக் வெற்றி: முதல் இடம் பிடித்து அசத்தல்

Report Print Athavan in கிரிக்கெட்
381Shares
381Shares
ibctamil.com

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கேஎல் ராகுல், கெய்ல் அதிரடியால் பஞ்சாப் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் 74, உத்தப்பா 34, தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தால் 191 ரன்கள் குவித்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தொடக்கம் முதலே இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது கெய்ல் 49 ரன்னுடனும், கேஎல் ராகுல் 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் மழை நின்றதும் சுமார் 8.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லிவிஸ் விதிப்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்களுடனும், அகர்வால் 2 பந்தில் 2 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்