ஐதராபாத்தை திணற வைத்த அம்பத்தி ராயுடுவின் சாதனைகள் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்
195Shares
195Shares
ibctamil.com

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் விளாசிய அம்பத்தி ராயுடு, ஐ.பி.எல்-லில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 180 ஓட்டங்கள் இலக்கினை, சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

இந்த போட்டியில் சென்னை வீரர் அம்பத்தி ராயுடு அதிரடி சதம் விளாசினார். 62 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சதம் விளாசியதன் மூலம் அவர் படைத்த சாதனைகள் இதோ

  • பந்துவீச்சில் வலுவான ஐதராபாத் அணிக்கு எதிராக இந்த சீசனில் 3 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் ராயுடு அடித்த சதமும் அடங்கும்.
  • அம்பத்தி ராயுடு முதன் முறையாக ஐ.பி.எல்லின் ஒரு சீசனில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, இதுவரை 535 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
  • அம்பத்தி ராயுடு தனது 32வது வயதில் தனது முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
  • ஐ.பி.எல்-லின் ஒரு சீசனில் சென்னை அணி வீரர்கள் இருவர் சதங்கள் விளாசியது இதுவே முதல் முறையாகும். வாட்சன் (106), ராயுடு (100) ஆகியோர் சதமடித்துள்ளனர்.
  • ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த கூட்டணியில் ராயுடு, வாட்சனுடன் சேர்ந்து 2வது இடத்தை பிடித்துள்ளார். இருவரும் சேர்ந்து ஒரே போட்டியில் 134 ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.
  • ஐ.பி.எல்-லில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராயுடு 14ஆவது வீரராக இணைந்துள்ளார்.
  • 2018 ஐ.பி.எல்-லில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ராயுடு, ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் 29 சிக்ஸர்கள், 48 பவுண்டரிகள் அடங்கும்.
  • BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்