பந்து வீச அதிக நேரம்: ரஹானேவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
146Shares
146Shares
ibctamil.com

ஐபிஎல் தொடரின் 47-லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லெவிஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் அபாரமாக ஆடி 94 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டார். பந்துவீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்துக்கொண்டது ஐபிஎல் விதிக்கு எதிரானது.

இதையடுத்து, கேப்டன் ரஹானேவுக்கு அவரது ஊதியத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று விராட் கோஹ்லிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்