ராகுல் டிராவிட்- ரிக்கி பாண்டிங்கை சிறப்பாக கவுரவித்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், U19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டுக்கு ‘Hall of Fame' எனும் கவுரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட், இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ஓட்டங்களும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ஓட்டங்களும் குவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ‘Hall of Fame' மூலம் ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டுக்கு ஐசிசி இந்த கவுரவத்தை அளித்துள்ளது.

இந்த பெருமையை பெரும் 5வது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆவார். இதற்கு முன்பு பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய இந்திய வீரர்கள் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.

மேலும், ‘Hall of Fame' கவுரவம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை க்ளேர் டெய்லர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ரிக்கி பாண்டிங் அவுஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 13,378 ஓட்டங்களும், 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களும் குவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers