கோஹ்லியையே மிரள வைத்த இங்கிலாந்து வீரர்: ஸ்டம்பை பறிகொடுத்து மிரண்டு நின்ற வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் பந்து வீச்சில் கோஹ்லி போல்டாகி வெளியேறியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தொடரை இழந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருந்தார்.

இந்திய அணியில் விக்கெட்டுகள் விழுந்த போதிலும், கோஹ்லி மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் அணியின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

அப்போது 30-வது ஓவரை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் வீசினார். இதை கோஹ்லி அசால்ட்டாக எதிர்கொள்ள, பந்தானது தரையில் பட்ட வேகத்தில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

இதனால் கோஹ்லி என்ன நடந்தது என்று தெரியாமலே மைதானத்தில் சில நொடிகள் நின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்