என்னை நீக்கியது ஏன்? முரளி விஜய் குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தேர்வு குழுவினர்கள் தன்னிடம் பேசவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் இந்திய வீரரான முரளி விஜய்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முரளி விஜய், மோசமான பார்மின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் பேசிய முரளிவிஜய், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் என்னை தேர்வுக்குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை.

அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைபிடிக்கப்படுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

ஒரு வீரரை நீக்கினால் அதற்கான காரணத்தை தெரிவிப்பது மிக முக்கியமானது.

தற்போது அவுஸ்திரேலியா தொடருக்காக தயாராகிவருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்