அவுஸ்திரேலியாவின் மிரட்டலில் அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. சதமடித்து காப்பாற்றிய புஜாரா!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள் எடுத்தது.

அடிலெய்டு மைதானத்தில் தொடங்கிய இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்டில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 2 ஓட்டங்களிலும், முரளி விஜய் 11 ஓட்டங்களிலும் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர்.

பின்னர் வந்த விராட் கோஹ்லி 3 ஓட்டங்களில் இருந்தபோது, கம்மின்ஸ் வீசிய பந்தை ட்ரைவ் ஷாட் ஆடினார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி கல்லியில் நின்றிருந்த கவாஜாவிடம் சென்றது. அவருக்கு இடது புறம் வேகமாக சென்ற பந்தை ஒற்றைக் கையில் அசாத்தியமாக பிடித்தார் கவாஜா.

இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த ரஹானேவும் 13 ஓட்டங்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆக, இந்திய அணி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

Getty

இதனைத் தொடர்ந்து வந்த ரோஹித் ஷர்மா ஓரளவு தாக்குப் பிடித்து 37 ஓட்டங்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட், அஸ்வின் ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் புஜாரா நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 246 பந்துகளை சந்தித்த புஜாரா 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 123 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

AP

முதல் நாள் முடிவில், இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

Reuters
REUTERS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்