சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது இப்படிதான்! ரபாடாவின் பலே திட்டம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் லீக் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரை ரபாடா யார்க்கராக வீசியதே டெல்லி அணியை வெற்றி பெற வைத்தது.

நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இதனைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது.

அதன்படி டெல்லி அணி முதலில் ஆடி 10 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து கொல்கத்தா அணி துடுப்பாட்டம் செய்தபோது, டெல்லியின் ரபாடா சூப்பர் ஓவரை வீசினார்.

சிறப்பாக பந்து வீசிய அவர், மிரட்டல் வீரரான ரசலின் விக்கெட்டையும் கைப்பற்றி அணியை வெற்றி பெற வைத்தார். யார்க்கர் பந்துகளை வீசுவதே ரசலின் திட்டமாக இருந்துள்ளது.

அவர் திட்டமிடாமல் முதல் பந்தை வீசியதால், ரசல் அதில் பவுண்டரி விளாசினார். அதன் பின்னர் 5 பந்துகளை யார்க்கராகவே ரபாடா வீசினார். இதனால் கொல்கத்தா அணி தடுமாறியது.

அந்த அணி மேற்கொண்டு 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அத்துடன் ரசலின் விக்கெட்டையும் ரபாடா வீழ்த்தினார். 11 ஓட்டங்களை மட்டுமே வெற்றி இலக்காக வைத்து டெல்லி அணி அபாரமாக வெற்ற பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்