உலகக்கோப்பை அணியில் இருந்து முன்னணி வீரர் விலகல்? அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் திடீரென சொந்தக் காரணங்களுக்காக காலவரையின்றி கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

12வது 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி நான்கு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

15 பேர் கொண்ட அணிக்கு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அணியில் ஆல்ரவுண்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், திடீரென சொந்தக் காரணங்களுக்காக காலவரையின்றி கிரிக்கெட் போட்டியில் இருந்து அலெக்ஸ் விலகியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குள் மீண்டும் அணிக்கு திரும்புவாரா மாட்டாரா என்பது குறித்த தகவலை அலெக்ஸ் தெரிவிக்கவில்லை. இதனால், மாற்று வீரரை அறிவிக்கலாமா வேண்டாமா என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குழப்பத்தில் உள்ளது.

முன்னணி வீரரான அலெக்ஸ் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகிய செய்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்