டோனியை அதிரடியாக ஆட வைப்பதே எனது பங்கு! விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பையில் சதம் அடிக்காத போதிலும் டோனி போன்ற வீரர்களை அதிரடியாக ஆட வைக்க வேண்டும் என்பதே தனது பணியாக இருந்ததாக, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ரன் மெஷின் என்று அழைக்கப்படும் நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி அணித்தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

அதே சமயம் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா 5 சதங்கள் அடித்து மிரட்டி வருகிறார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆனால் உலகக்கோப்பையில் தனது பங்கு மாறுபட்டது என்றும் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்த உலகக்கோப்பையில் நான் மாறுபட்ட ரோலில் விளையாடி வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருக்கும் நான், எந்த விதமான ரோலாக இருந்தாலும் அணிக்கு அது தேவையென்றால் செய்தாக வேண்டும்.

AFP

தொடர்ச்சியாக ரோஹித் ஷர்மா சதம் அடிப்பது மகிழ்ச்சியான விடயம். போட்டியில் சுமார் 20 ஓவர்களுக்குப் பின் மாறுபட்ட ரோலில் விளையாட வேண்டும். மிடில் ஓவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், எம்.எஸ்.டோனி போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாட வைக்க வேண்டும்.

தற்போது ரிஷப் அணியில் இடம் பிடித்து அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நான் தற்போது செய்து கொண்டிருக்கும் ரோல் ஒருநாள் போட்டியில் மாறுபட்டது என்பதை புரிந்துகொண்டேன். மேலும், ஆட்டத்தின் சூழ்நிலை எவ்வாறு செல்கிறதோ? அதற்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய வேண்டும்.

ஒரு பக்கம் நிலைத்து நின்று, மறுபக்கத்தில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட் 150, 160 அல்லது 200 ஆக இருக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தேவைப்பட்டால் மறுபக்கத்தில் நான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியதன் மூலம், இந்த உலகக்கோப்பையில் நான் அதிக விடயங்களை கற்றுக் கொண்டேன். இதுதான் நமது ரோல் என்பதால், அதற்கு ஏற்றபடி விளையாட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers