சுழலில் சுருட்டிய ரஷித்கான்... வங்கதேசத்தை ஊதி தள்ளி அபார வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான்

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேசம் அணிக்கெதிரான் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ஓட்டங்கள் குவித்தது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 205 ஓட்டங்களில் சுருண்டது.

137 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

398 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 173 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான் 6 விக்கெட்டும், ஜாகீர் கான் 3 விக்கெட்டும், நபி 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் அணித்தலைவராக முதல் போட்டியில் களமிறங்கிய ரஷித் கான் வெற்றி வாகை சூடியுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்