அவுஸ்திரேலிய அணியை பழிக்குப்பழி வாங்கிய இந்திய அணி: 10 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
437Shares

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மும்பையில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 255 ரன்கள் எடுத்திருந்தபோதே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ICC

அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒரு விக்கெட்டை கூட பறிகொடுக்காமல், 37.5 பந்துகளிலே அவுஸ்திரேலிய அணி வெற்றிகனியை ருசித்தது.

இந்த நிலையில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீசிச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 340 ரன்களை குவித்தது.

ICC

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 96 ரன்களும், லோகேஷ் ராகுல் 80 ரன்களும், விராட்கோஹ்லி 78 ரன்களும் குவித்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், கேன் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து திணற ஆரம்பித்தது.

ICC

49.1 பந்துகள் இருந்தபோது அந்த அணி 302 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 98 ரன்களை குவித்திருந்தார். இந்திய அணி சார்பில், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்