‘சச்சின் மட்டுமே எனக்கு நெருக்கடிகளைத் தந்து பல முறை வெளியேற்றினார்’... மனம் திறந்த முன்னாள் நட்சத்திரம்

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை யார் முறியடிப்பதை காண காத்திருப்பதாக கூறியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் இன்சமாம் கூறியதாவது, சச்சின் கிரிக்கெட்டிற்காக பிறந்தார். கிரிக்கெட் மற்றும் சச்சினும் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டது என நான் எப்போதும் நம்பினேன்.

16-17 வயதில் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கி இத்தனை சாதனைகளை அவர் படைத்தது குறித்து நான் வியக்கிறேன். இது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரால் மட்டுமே முடியும். உண்மையில் மிகச்சிறந்த வீரருக்கு மேல் எதாவது இருந்தால் அது சச்சின் தான்.

சொல்வது சுலபம் செய்வது கடினம். 16 வயதில் தனது முதல் போட்டியில் அவர் வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்டுள்ளார்.

உலகில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். ஓட்டங்கள் எடுப்பதில் சச்சின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். சச்சினின் இமலாய சாதனையை யார் உடைப்பார்கள் என்று நான் காத்திருக்கிறேன்.

சச்சினுக்கு சிறந்த மனவலிமை உடையவர். நெருக்கடியான சூழலிலும் அவர் ஓட்டங்கள் குவிப்பார். இதுபோன்ற ரசிகர் பட்டாளம் உடைய கிரிக்கெட் வீரரரை நான் பார்த்ததே இல்லை. சச்சினக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சச்சின் சிறந்த கிரிக்கெட் மேதை. அவர் எப்படி வேண்டுமானாலும் பந்து வீசுவார். நான் பல சிறந்த கால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டேன், அவர்களின் கூகிளை யூகிப்பதில் ஒருபோதும் சிக்கல் ஏற்பட்டதில்லை.

ஆனால், சச்சின் மட்டுமே எனக்கு நெருக்கடிகளைத் தந்து என்னை பல முறை வெளியேற்றினார்.

கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு வீரர் இல்லை, எதிர்காலத்தில் யாராவது இந்த இமாலய ஓட்டங்களை அடிக்கலாம்.

சச்சின் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் ஒருபோதும் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கக்கூடாது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...