‘பிரட் லீ-க்கு பயந்து தூங்கவில்லை’.. தன்னை மிரட்டிய பந்து வீச்சாளர்களை வெளியிட்டார் ஹிட்மேன் ரோகித்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டகாரர் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்து வீச்சாளர்களின் பெயரை வெளியிட்டார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ மற்றும் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் பந்துகளை எதிர்கொள்வது மோசமான கனவு போல உணர்ந்ததாக ரோகித் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எனது முதல் சுற்றுப்பயணத்தில், போட்டிக்கு முந்தைய இரவு பிரட் லீ-யை நினைத்து நான் தூங்கவில்லை.

ஏனெனில் 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் இந்த பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்வது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன் என்று ரோகித் கூறினார்.

2007 ஆம் ஆண்டில், பிரட் லீ உச்சத்தில் இருந்தார். நான் அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன், அவர் தொடர்ந்து 150-155 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதை கவனித்தேன். என்னைப் போன்ற இளைஞன் எப்படி அந்த வேகத்தை எதிர்கொள்வது என்ற எண்ணம் என் தூக்கத்தை பறித்தது .

நான் ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத இரண்டு பிடித்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் பிரட் லீ மற்றும் மற்றொருவர் டெல் ஸ்டெயின்.

நான் ஒருபோதும் ஸ்டெயினை எதிர்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் பேஸ் மற்றும் ஸ்விங் பவுலிங்கை ஒரே நேரத்தில் விளையாடுவது ஒரு மோசமான கனவுதான், அது உண்மையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது, ​​டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எதிர்கொள்ள விரும்பாத ஒருவர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆவார், ஏனெனில் அவர் மிக நேர்த்தியாக பந்து வீசுவார் என்று ரோகித் கூறினார்.

ஹேசில்வுட் சுலபமான பந்துகளை வீசுவதில்லை. அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் அவரைப் கவனித்துதிருக்கிறேன்.

டெஸ்ட் விளையாட அவுஸ்திரேலியா செல்ல வேண்டுமானால், ஜோஷை எதிர்கொள்ளும் போது ஒழுக்கமாக இருக்க நான் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என ரோகித் குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்