பட்டாசாய் வெடித்த ராகுல், கெயில்: சின்னாபின்னமான கோஹ்லியின் பெங்களூர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31வது ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்களை சேர்த்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 48(39) ஓட்டங்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியின் சார்பில், அணித்தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 45(25) ஓட்டங்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கிரிஸ் கெயில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர்களாக விளாசிய அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 1 ரன் தேவைப்பட்டநிலையில் கெயில் 53(45) ஓட்டங்களில் ரன்-அவுட் ஆனார்.

இறுதியில் ராகுலுடன் இணைந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டு அணியின் வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.

கே.எல்.ராகுல் 61(49) ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 6(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்