ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், அந்தணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியினருக்கு பிளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி தன்னுடைய பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து நான்கு வெற்றிகளையும் பஞ்சாப் அணி பெற்றுள்ளதால், அந்தணியின் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
What a victory this for @lionsdenkxip. Four wins in a row for them.
— IndianPremierLeague (@IPL) October 24, 2020
They win by 12 runs.#Dream11IPL pic.twitter.com/YuzbILBiAd
அதில், குறிப்பாக உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அதன் படி நேற்றைய போட்டியில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றதால், ப்ரீத்தி ஜிந்தா பிளையிங் கிஸ் ராகுல் அன் கோ அணியினருக்கு கொடுத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.