அவுஸ்திரேலிய அணியை புரட்டியெடுத்து கோப்பையை தட்டி சென்ற இந்தியா! பாராட்டிய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே

Report Print Raju Raju in கிரிக்கெட்
1132Shares

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியை இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே டுவிட்டரில், இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒரு கிரிக்கெட் வீரருக்கு சிறந்த சவால் அளிப்பதாக உள்ளது.

என்ன ஒரு அருமையான போட்டி, இந்திய அணி நன்றாக செயல்பட்டது.

பார்ப்பதற்கு அற்புதமான கிரிக்கெட் தொடராக இது இருந்தது என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்