குங்குமப்பூ எந்தெந்த நோய்களை குணமாக்கும் தெரியுமா?

Report Print Kavitha in நோய்
1496Shares

குங்குமப் பூ உலகளவில் உயர்ந்த மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது.

குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது.

குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. ஏனெனில் குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றது.

அதுவும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அதிக நன்மையை பெறுகின்றனர்.

அந்தவயைில் குங்குமப் பூ என்னென்ன நோய்களை குணமாக்கும் சக்திப்படைத்தது இதில் என்னென்ன சத்துக்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

என்ன சத்துக்கள் உள்ளது?

கார்போஹைட்ரேட் – 1.37 grams, கொழுப்பு – 0.12 grams, புரதம் – 0.24 grams ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

அதோடு வைட்டமின் சி, பி9, பி3, பி6, பி2 ஆகிய வைட்டமின்களும் இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய ஏராளமான மினரல்களும் நிறைந்து காணப்படுகின்றன.

குரோசின், க்ரோசிட்டின், சபிரனால் , கேம்ஃபிரோல் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளது.

எந்தெந்த நோயை குணப்படுத்தும்?
  • மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட குங்குமப்பூவை பாலில் சேர்த்து குடிக்கலாம். இது மூளையை அமைதியாக வைத்திருக்கச் செய்யும்.
  • அடிபட்ட காயங்கள், மூட்டு வலி, பல் வலியை ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. மேலும் குங்குமப்பூவில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை காயங்களை விரைவாக ஆற்ற உதவுகிறது.
  • எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் தங்களுடைய டயட்டில் ஏதேனும் ஒரு வகையில் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளலாம்.
  • குங்குமப்பூவில் உள்ள அதிக அளவிலான ஆன்டிஆக்சிடெண்ட் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களைச் சமநிலை செய்ய உதவுகிறது. இந்த ப்ரீ ராடிக்கல்கள் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
  • குங்குமப்பூ இதயத்தின் உந்து செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இதய செயல்பாட்டை. மேம்மடுத்த உதவுகிறது. இதில் உள்ள கேமம்ஃபிரோல் இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட ஒரு மூலக்கூறாகும். இதயப் படபடப்பைப் போக்கும்.
  • வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர் நோய்க்கான தீர்வைத் தருகிறது.
  • மாதவிடாய் கால வலியைக் குறைக்க உதவுகிறது.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்