அந்தரங்க புகைப்படங்கள்: உருக்கமாக அறிக்கை வெளியிட்ட தனுஷின் சகோதரி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் தனுஷ் குறித்து கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வெளியாகி வரும் அந்தரங்க புகைப்படங்கள் குறித்து அவரது சகோதரி கீதா கவலை தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து, பிரபல நட்சத்திரங்களில் அந்தரங்க புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருப்பதால் கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உள்ளது.

ஆனால், இது தன்னுடைய டுவிட்டர் கணக்கு இல்லை என்று சுசித்ரா தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு போலியான டுவிட்டர் கணக்குகளிலிருந்து நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகின.

இதில் அதிகமாக நடிகர் தனுஷின் புகைப்படங்கள் தான் இடம்பிடித்தன.

இந்நிலையில் இதுகுறித்து தனுஷின் சகோதரி கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பத்திற்கு வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மிகவும் மனம் நொந்து போயுள்ளோம்.

இருப்பினும் நாங்கள் அமைதி காத்து வருகிறோம், தனுஷ் தியாகங்கள் செய்து தான் எங்களுக்கு இத்தகைய வாழ்க்கையை கொடுத்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த நாங்கள்,கடும் உழைப்பின் காரணமாகத்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம்.

தேனியின் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, ஒரே இரவில் நாங்கள் பெரிய ஆட்கள் ஆகிவிடவில்லை.

என்னுடைய சகோதரன் தனுஷ், இது போன்ற எத்தனையோ அவதூறுகளை சந்தித்துதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான்.

ஒரு பிரபலத்தின் பெயரை கெடுக்க இப்படி ஆபாச படங்களை வெளியிடுகிறார்கள் என்பதை விட, மக்கள் அதை ஆர்வமுடன் பார்க்கிறார்கள், இன்னும் வெளியிடுங்கள் என அவரிடம் கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது.

எது நடந்தாலும் நாங்கள் ஒன்றாக இந்த பிரச்னையை எதிர்கொள்வோம், வருத்தத்துடன் என்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக மூடுகிறேன்.

யார் இந்த காரியங்களையெல்லாம் செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இதோடு நிறுத்தி கொள்ளுங்கள், வாழுங்கள் வாழவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments