தலையை மட்டும் வெளியில் வைத்து மண்ணில் புதைந்து இருந்த நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான திவ்யா தத்தா மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மண்ணில் புதைந்து கொண்டு தலையை மட்டும் வெளியில் வைத்துள்ளது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் இயக்குனரான குஷன் நந்தி பாபுமொஷாய் பண்டூக்பாஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். திரில்லர் படமான இப்படத்தில் நடிகை திவ்யார் தாத்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கான காட்சிகள் எடுப்பதற்காக படக்குழு லக்னோ சென்றுள்ளது. அங்கு திவ்யா தாத்தா இடம் பெற்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கிருக்கும் ஒரு வயலில் கடும் வெயில் என்று கூட பாராமல் திவ்யா தாத்தா தனது உடல் முழுவதையும் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியில் வைத்து மூன்று மணி நேரம் இருந்துள்ளார். இக்காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக எடுக்கப்பட்டுள்ளது.

திவ்யா தாத்தா 3 மணி நேரம் மண்ணில் புதைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments