பிரபல நகைச்சுவை நடிகர் விஜய் தூக்கிட்டு தற்கொலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1999Shares
1999Shares
lankasrimarket.com

முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்த தெலுங்கு நடிகர் விஜய் சாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொம்மாரிலு, அம்மாயிலு அப்பாயிலு போன்ற பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் விஜய் சாய் (38).

இவருக்கு சில காலமாக சரியான பட வாய்ப்புகள் வராத நிலையில் கடந்த 2015-லிருந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதோடு பணப்பிரச்சனையும் இருந்ததால் மன அழுத்தத்தால் விஜய் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்த குடும்பத்தார் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விஜய்யின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்