பிரபல நடிகர் ஷாருக்கான் மகனிடம் பிச்சை போட கூட காசு இல்லையா? சிறுமிக்கு எப்படி பணம் கொடுக்கிறார் பாருங்க

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான ஷாருக்கான் மகனிடம் சிறுமி ஒருவர் பிச்சை கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானின் மகன் Aryan சமீபத்தில் பிறந்தநாள் விழா ஒன்றிற்கு தன்னுடைய சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்த சிறுமி ஒருவர் காசு கேட்டு பிச்சை கேட்டுள்ளார். அப்போது முதலில் இல்லை என்று மறுக்கும் அவரை, அந்த சிறுமி காரில் ஏறிய போதும் காசு கேட்கிறார், உடனடியாக அருகில் இருந்த நபர் ஒருவர் பணத்தை கொடுக்க அந்த சிறுமி நன்றி என கூறுகிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக, இணையவாசிகள் அனைவரும் ஷாருக்கான் மகனிடமே பணம் இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிச்சை கேட்ட அந்த சிறுமியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்