பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஆர்த்தி: ஐஸ்வர்யாவை எப்படி கலாய்த்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர்களான ஆர்த்தி, சுஜா வருணி, காயத்ரி, சினேகன், வையாபுரி ஆகியோர் பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து ஐஸ்வர்யாவுக்கு பதில் சென்றாயனை வெளியேற்றியதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் சீசன் 1 போட்டியாளர்களான ஆர்த்தி, சுஜா வருணி, காயத்ரி, சினேகன், வையாபுரி ஆகியோர் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வையாபுரி நேராக சென்று தாடி பாலாஜியை கட்டிப்பிடித்தார். சினேகன் யாரை எல்லாம் கட்டிப்பிடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பிக்பாஸையும், ஐஸ்வர்யாவையும் டுவிட்டரில் கிழிக்கும் ஆர்த்தி, நேரில் ஐஸ்வர்யாவை கிண்டலடித்தார்.

அதாவது, ஐஸ்வர்யாவை பார்த்த அவர் தமிழ்நாட்டின் திருமகளே பிக் பாஸ் வீட்டின் மருமகளே என்றார்.

இது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers