கோலாகலமாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமணம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் நேற்று முடிந்த நிலையில், வருகிற 14ஆம் திகதி சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நடிகர் ஆர்யா-சாயிஷா இருவரும் தங்களது காதலை, கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரியவந்தது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் ஆர்யா-சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அதன் பின்னர், இஸ்லாமிய முறைப்படி நேற்றைய தினம் ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா மற்றும் தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ராஜசேகர பாண்டியன், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, வரும் 14ஆம் திகதி சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...