சர்ச்சையான ஜஸ்வர்யா ராய் மீம்... சிக்கலில் நடிகர் விவேக் ஒபராய்

Report Print Basu in பொழுதுபோக்கு

நடிகை ஜஸ்வர்யா ராயை மையப்படுத்தி ஆட்சேபணைக்குரிய மீம்ஸ் ஒன்றை வெளியிட்ட நடிகர் விவேக் ஓபராய் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் விமர்சித்தும், வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டலடிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்து வரும் நிலையில், ஆட்சேபணைக்குரிய மீம்ஸ் போட்ட நடிகர் விவேக் ஓபராய் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா மாநில மகளில் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்