நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் விவேக். நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களையும், மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை கூறுவதால், இவர் ‘சின்னக்கலைவாணர்’ என்று அழைக்கப்படுகிறார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமை மிகவும் மதிக்கும் விவேக், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சொந்த ஊரான சங்கரன் கோயில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விவேக்கின் மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இறந்தார். அந்த துயரத்தில் இருந்தே அவரது குடும்பம் மீண்டு வரும் வேளையில், அவரது தாயாரின் இறப்பு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்