கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்து பிரபல பாடகி!.. வீடு திரும்பியதாக தகவல்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
117Shares

மூச்சுத்திணறல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழாரம் சூட்டப்பட்டவர் லதா மங்கேஷ்கர், இந்தி மொழியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி 90வது பிறந்தநாளை கொண்டாடியவருக்கு, மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ள லதா மங்கேஷ்கர், குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்