எனது மூன்றாவது திருமணம் குறித்து அவதூறாக பேசுகிறார்! இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு சென்ற நடிகை வனிதா

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் அதிரடியாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ஆம் திகதி பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் தனக்கு தெரியாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில் அவர் நேற்று முன்தினம் இரவு தனது வழக்கறிஞருடன் சென்னை போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், சமூக வலைத்தளத்தில் சூர்யாதேவி என்ற பெண் தனது 3-வது திருமணம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போரூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்