எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நினைவு இல்லம்! உறுதியாக கூறிய மகன் எஸ்.பி.சரண்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் சரண் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரின் உடல், திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவரது மகன் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்,

மேலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட பொலிசாருடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்