நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த 14ம் திகதி முதல் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து படப்பிடிப்பானது உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதோடு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இருப்பினும் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.