அடி சறுக்கிய எலான் மஸ்க்; மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடம்

Report Print Ragavan Ragavan in தொழிலதிபர்
0Shares

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

டெஸ்லா பங்குகள் 2.4 சதவீதம் சரிந்ததால் எலன் மஸ்க் 4.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

கடந்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி எலன் மஸ்க் உலக செல்வந்தர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், இப்போது டெஸ்லா பங்குகளின் மதிப்பு குறைந்ததால் மீண்டும் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 191.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்