கொரோனா தொற்று பிடியில் ஐரோப்பிய ஒன்றியம்! பாதிப்பு குறித்த முழு விவரங்கள்

Report Print Karthi in ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 22 நாடுகளை உள்ளடக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் அதிக அளவில் கொரோனா நோயாளிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, பிரித்தானியா 18,978 புதிய கொரோனா நோயாளிகளை கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது பாரிய அளவிலான பரிசோதனைகளின் அடிப்படையில் வெளிவந்துள்ளது என்றாலும் கூட தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்பதையே இது உறுதி செய்கின்றது.

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ஜெர்மன் தொற்று பரவலின் தலைமையகமாக மாறி வருகின்றது என எச்சரித்துள்ளார். சமீபத்திய தகவலின் படி புதியதாக 6,600 கொரோனா நோயாளிகளை ஜேர்மன் அடையாளம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும்.

Image credit: Getty

அதே போல 33 பேர் சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வாரங்களில் பதிவு செய்யப்பட்டதை விட இரட்டிப்பானதாகும்.

இந்நிலையில் ஜேர்மனியில் 16 மாநிலங்களிலும் இரவு 11 மேல் பார்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகள், 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் என பல அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அளவில் நாம் தற்போது இல்லை. தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது என அங்கேலா குறிப்பிட்டுள்ளார்.

பெர்லினில் இரவு 11 மேல் மதுபான விடுதிகள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image credit: Reuters

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து ஜேர்மன் வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பவேரியாவின் ஆளுநர், மார்கஸ் சோடர் கூறியுள்ளார்.

பிரான்ஸை பொறுத்த அளவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மொத்த பரிசோதனை அளவில், 12.6 சதவிகமாக உள்ளது.

இத்தாலியை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை இந்த எண்ணிக்கையானது 43 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகப்பட்சமாக 8,830 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,127 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இம்மாதம் இறுதி வரை இப்பிராந்தியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

செக் குடியரசில் கடந்த 24 மணி நேரத்தில் 9,721 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல 900க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Images credit: Getty

நெதர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,844 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த மார்ச்சில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். இதன் காரணமாக உணவங்களையும், மதுபான விடுதிகளையும் அரசு மூடியுள்ளது.

போலாந்தில் 8,099 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முககவசங்களும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

போர்ச்சுக்கல்லில் 2,101 கொரோனா நோயாளிகள் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அல்பேனியா: 257 ஆஸ்திரியா: 1,552 பெல்ஜியம்: 8,271 பல்கேரியா: 819 குரோஷியா: 793 ஜார்ஜியா: 919 கிரீஸ்: 492 அயர்லாந்து: 1,186 லிதுவேனியா: 255 மால்டா: 112 வடக்கு மாசிடோனியா: 443 ருமேனியா: 4,013 ஸ்லோவாக்கியா: 2,075 ஸ்லோவேனியா: 7,99 உக்ரைன் 5,992 என கொரோனா பதிப்புகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்