வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கந்த சஷ்டி உற்சவம்

Report Print Kavitha in நிகழ்வுகள்

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் நான்காம் நாள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாலையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிலையில் கந்த சஷ்டி உற்சவதத்தின் ஐந்தாம் நாளான நேற்று மாலையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers