கௌரவிப்பு நிகழ்வில் வைத்து தனது மகன், மகளுடன் கிரிக்கெட் விளையாடிய முத்தையா முரளிதரன்

Report Print Sujitha Sri in நிகழ்வுகள்
599Shares

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு பெருமை தேடித் தந்த சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிகளவான விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என விஸ்டன் கிரிக்கெட் மாத சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

உலகில் முன்னணி கிரிக்கெட் ஆய்வு நிறுவனமான கிறிக்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சஞ்சிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 30 டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை தெரிவுசெய்துள்ளது.

இதில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முன்னணியில் உள்ளார்.

முரளிதரனுக்கு கிடைத்த குறித்த அங்கீகாரத்தை கொண்டாடும் வகையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் முத்தையா முரளிதரன், அவரின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முத்தையா முரளிதரன் தனது மகன் மற்றும் மகளுடன் கிரிக்கெட் விளையாடில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்