சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

அந்தவகையில் பாசிப்பருப்பில் செய்யப்படும் தோசை மிகவும் சத்து நிறைந்ததாகவும், எல்லோரும் சாப்பிடக்கூடிய வகையில் இருந்து தயாரிக்கப்படும்.

தற்போது இந்த சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசையை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பாசிப்பருப்பு - 1 கப்
  • பச்சரிசி - கால் கப்
  • தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • சின்ன வெங்காயம் - 10
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை

அரிசி மற்றும் பாசிபருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

சூப்பரான பாசிப்பருப்பு தோசை தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்