உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டயட் சூப்பை குடிங்க

Report Print Kavitha in உணவு

இன்று உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவகையில் பல டயட்டுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப்பை அடிக்கடி செய்து குடித்தால் நாளாடைவில் நல்ல பயன் பெறலாம்.

தற்போது இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கோஸ் - 100 கிராம்
  • ப்ரோக்கோலி - கால் பாகம்
  • கேரட் - 1
  • தக்காளி - 1
  • காளான் - 10
  • செலரி, கொத்தமல்லி, வெங்காயத்தாள் - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

கோஸ், ப்ரோக்கோலி, கேரட், காளான், தக்காளி, கொத்தமல்லி, செலரி, வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தாளை போட்டு வதக்கவும்.

அடுத்து காளான், கோஸை போட்டு வதக்கவும்.

5 நிமிடம் வதங்கிய பின்னர் தக்காளி, ப்ரோக்கோலியை போட்டு வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து செலரி, கேரட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் நன்கு வெந்து அதில் உள்ள சத்துக்கள் நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத்தூளும் கம்மியாக சேர்க்கவும். சூப்பரான ப்ரோக்கோலி கோஸ் டயட் சூப் தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்