சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

மக்கள் பரவலாக விரும்பி சாப்பிடப்படும் கிழங்கு வகைகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் ஒன்றாகும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

அந்தவகையில் இதனை கொண்டு சுவையான அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரை கிலோ
  • துருவிய வெல்லம் - 2 கப்
  • கேசரி பவுடர் - சிறிதளவு
  • நெய் - தேவைக்கு
  • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

வெல்லம் கரைந்ததும் மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை கொட்டி கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய், கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்